BJP will lose its deposit and reach its old status when India’s coalition government flourishes in Delhi! MMK State President Jawahirullah interviewed in Perambalur!

பெரம்பலூரில் எழுத்தாளரும் ஓவிய ஆசிரியருமான தாஹீர்பாட்ஷா எழுதிய “பூக்களுக்கு உன் வாசம்”, “பிரியாணி கடை” எனும் நூல்களின் வெளியீட்டு விழாவிற்காக நேற்று மாலை, பெரம்பலூருக்கு வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தேர்தல் பத்திரம் செல்வது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை வந்துள்ளதாகவும், சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வரவழைத்துள்ளதாகவும்

இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் பலமாகி வருகிறது, நிதிஷ்குமார் விலகியதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.டெல்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தொகுதி பங்கீடு செய்துள்ளதாகவும், உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றிணைந்து தொகுதி பங்கீடு செய்ய உள்ளதாகவும் இதனால் இந்தியா கூட்டணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் தங்களின் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய திமுதவிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும், டெல்லியில் இந்தியா கூட்டணி ஆட்சி மலரும் போது பாஜக டெப்பாசிட்டை இழந்து பழைய நிலையை சென்றடையும் என தெரிவித்தார். மமக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் குதரத்துல்லா உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!