பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சாமி.இளங்கோவன் விடுத்துள்ள தகவல் :
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனின் ஒப்புதலுடன், பெரம்பலூர் மாவட்ட பொதுச் செயலாளராக எம. ராமசாமி, மற்றும் எஸ். கண்ணனும், மாவட்ட பொருளாளராக எஸ்.சாமிநாதன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொருளாளராக நியமிக்கப்ட்டுள்ள எஸ்.சாமிநாதன் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டு நிறுவனம் வைத்து பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து அதன் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொருளாதார மேம்பாடு அடையவும்ம, மற்றும் பல்வேறு நலப் பணிகளை செய்து வருகிறார். மேலும், பெண் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பு, சிறு தொழில் துவக்கம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய நலிவடைந்த பெண்களுக்காகவும், ஆதரவற்றவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும், பெண்கள் முன்னேற்றத்திற்கும், மதுவால் சீரழியும் குடும்பத்தினருக்கு வழிகாட்டுதலையும், மதுவின் தீமைகள் குறித்து சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் திரட்டி அரும்பாவூர் உள்ளிட்ட ஊர்களில் மது ஒழிப்பு போராட்டம் நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து தரப்பு மக்களும் பழக எளிமையானவர்.