பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தில் தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களில் பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை 22.7.2016 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பெரம்பலூர்- 621212 என்ற முகவரியில் சமர்ப்பிக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.