blockade 527 people arrested in Perambalur !

மத்திய ஜனதா அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத கொள்கைகளை கண்டித்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூர் புதியபேருந்து நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் எஸ்.அகஸ்டின், சிஐடியு, ரெங்கசாமி எல்.பி.எப், அ.ராஜேந்திரன்,ஏஐடியுசி, சின்னசாமி ஹெச்எம்எஸ். ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயிகள் சங்கம் சார்பில் என்.செல்லதுரை, ஏ.கே.ராஜேந்தின், ராஜாசிதம்பரம் ஆகியோர் தலைமையில் வெங்காயமாலையுடன் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆட்டோக்கள் இயக்கப்பபடவில்லை, நிர்வாகிகள் சிஐடியு ரெங்கநாதன், சி.சண்முகம், அங்கன்வாடி ஊழியர் சங்கம் கே.மணிமேகலை, மேனகா, சாந்தி, எல்பிஎப் கே.கே.குமார், ரெங்கநாதன், ஏஐடியுசி வி.ஞானசேகரன், என்.தியாகராஜன், ஹெச்எம்எஸ். மின்னல்ஹபீப், நீலமேகம், விவசாய தொழிலாளர் சங்கம் பி.ரமஷ், மாதர் சங்கம் எ.கலையரசி, ஓய்வுபெற்றோர் நலஅமைப்பு சி.தங்கராஸ், ஆர்.முருகேசன், அரசு ஊழியர் சங்கம் பி.ராஜராஜன், சுப்ரமணியன், தீ.ஒ.மு எம்.கருணாநிதி உள்பட 527 பேர் மறியலில் கலந்து கொண்டனர். அனைவரையும் கைது செய்த போலீசார் அருகிலுள்ள தனியார் திருமன மண்டபத்தில் வைத்து பின்னர் விடுவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!