Board Head Office Siege at the end of May Electricity Contract Employees Perambalur Special Assembly Meeting Decided!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் விடுபட்ட கேங்மேன் பணியாளர்களுக்கான சிறப்பு பேரவை கூட்டம் நேற்று பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம், கோட்ட செயலாளர் பி.நாராயணன், வட்ட பொருளாளர் கண்ணன், அரியலூர் கோட்ட துணைசெயலாளர் ஆறுமுகம், கோட்ட தலைவர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிர்வாகம் அடையாளம் கண்டு தினக்கூலி 380 ரூபாய் வழங்க வேண்டும், மின்வாரிய களப்பிரிவில் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதை கணக்கில் கொண்டு கேங்மேன் பணிநியமனத்தில் மீதமுள்ள 5ஆயிரம் பணியிடங்களை பாதிக்கப்பட்ட மீதமுள்ள நபர்களுக்கு பணிநியமன உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மே மாத இறுதியில் வாரியத் தலைமை அலுவலக்கதை முற்றுகையிட்டு போராட்ட நடத்த பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!