Bolero jeep robbery at Perambalur: Mysterious people in the midnight!

களவாடப்பட்ட பொலிரோ ஜுப்
பெரம்பலூரில் தனியாருக்கு சொந்தமான தங்குமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ ஜீப் களவு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் கம்பன் நகரைச் சேர்ந்தவர் மெய்யன் (வயது53), பஸ் அதிபரான இவருக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சாலை அருகே காம்பளக்ஸ் (மேன்சன்) உள்ளது.
வழக்கம் நேற்று முன்தினம் இரவு காம்ளக்ஸ்சின் பார்க்கிங் பகுதியில் இவருடைய பொலிரோ ஜீப்பை நிறுத்தி விட்டு, காலை எழுந்து பார்த்த போது காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மெய்யன் சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஜீப் திருடப்பட்ட பகுதியில் உள்ள கடை ஒன்றில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை பெற்று தந்ததோடு, 5 லட்சம் மதிப்பிலான பொலிரோ ஜீப்பை முன்விரோதம் காரணமாக ரஞ்சன்குடியை சேர்ந்த ஒருவர் எடுத்து சென்று இருப்பார் என சந்தேகம் தெரிவித்தும், போலீசார் இதுவரை அவரிடம்
எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என மெய்யன் தெரிவித்துள்ளார்.