Bonus deal of trouble: a toll plaza employees returned to work again in perambalur near
பெரம்பலூர் அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில், ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய போனஸ் தொகையை வழங்கவேண்டி நிர்வாகத்திடம் பல முறை எழுத்து பூர்வமாகவும், வாய்மொழியாகவும் கேட்டனர். அவற்றை செயல்படுத்த சுங்கச்சாவடி நிர்வகம் முன்வராததால் கடந்த அக் 24. தொழிலாளர்கள் அனைவரும் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நிர்வாகத்தின் தரப்பில் இருந்து அக்25 அன்று மத்திய மண்டல தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தையின் மூலமாக சுமுகமான முறையில் தீர்வுகாணலாம் என வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
நேற்று சென்னையில் நடந்த பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. அதனால் இரவு 09:00 மணிக்கு மீண்டும் தொழிலாளர்களின் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். சுங்கச் சாவடி நிர்வாகத்தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தையை ஏஐடியூசி தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார் தலைமையில் இரவு 10:00 தொடங்கி நள்ளிரவு 01:30 மணி வரை நடந்தது. இறுதியில் 45 நாள் பணி ஊதியத்தை (ரூ. 11070 + 900 = 11,970)போனசாக அறிவித்ததை தொழிலாளர்கள் சார்பில் அச்தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார் ஏற்றுக்கொண்டதால் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி வாகன சுங்க கட்டணத்தை வசூலிக்க தொடங்கினர்.