Book fair in Perambalur District
பெரம்பலுார் மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நடத்தப்படுவது குறித்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டந்தோறும் புத்தககத் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், பெரம்பலுார் மாவட்டத்தில் மார்ச் மாதம் இறுதியில் பெரம்பலுார் நகராட்சி அலுவலக வளாகத்தில் புத்தகத்திருவிழா நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், பெரம்பலுார் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து நடத்த உள்ள புத்தககத் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற உள்ளார்கள். பொதுமக்களுக்கும், சிறுவர்களுக்கும், பள்ளி கல:லுாரி மாணவ மாணவிகளுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் மிகச்சிறப்பாக புத்தகத் திருவிழா நடத்தப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் கல்வி, வருவாய், ஊரக வளர்ச்சி, உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.