Book Fair in Perambalur: Organized by Plus Max Multinational Company!
பெரம்பலூரில் புத்தகத்திருவிழா 7-ஆம் நாள் நிகழ்ச்சி ப்ளஸ்மேக்ஸ் க்குருப் ஆப் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமாரின் தந்தை சூரியபிரகாசம் தலைமையில் நடந்தது.
பெரம்பலூர் நகராட்சி திடலில் 8வது புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. 100 அரங்குகளில் சுமார் 1லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தினமும் மாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்,கவிஞர்களின் உரை,பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.அதன்படி இன்று 7-ஆம் நாள் நிகழ்ச்சி ப்ளஸ் மேக்ஸ் க்ருப் ஆப் கம்பெனி ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ப்ளஸ்மேக்ஸ் க்குருப் ஆப் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமாரின் தந்தை பூலாம்பாடி சூரியபிரகாசம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பட்டிமன்ற பேராசிரியர்கள் மற்றும் உள்ளூர் கவிஞர்கள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். தொடர்ந்து அவர் சிறப்பு அழைப்பாளராக வந்த கவிஞர் அகரமுதல்வன் மற்றும் பத்மஸ்ரீநர்த்தகி நட்ராஜ் ஆகியோருக்கு சிறப்பு செய்தார். முன்னதாக அறம் எனும் பொறுப்பு எனும் தலைப்பில் பேசிய அகரமுதல்வன்,சங்க இலக்கியங்களில் அறம்பாடுதல் எனும் பகுதிகளை எடுத்துரைத்து நாமும் முடிந்தளவு நாமும் அறம் செய்து பழக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து பத்மஸ்ரீநர்த்தகிநட்ராஜ் -ன் நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், டத்தோ பிரகதீஸ்குமாரின் நேர்முக உதவியாளர் மணி, ஆசிரியர் வரதராஜன், பூலாம்பாடி சதீஸ்,செங்குட்டுவன்,கடம்பூர்பாலு, அரும்பாவூர் பத்திரம் சிவா, பூலாம்பாடி பேரூராட்சி கவுன்சிலர் மாணிக்கம், ரமேஷ் ,காங்கிரஸ் சுந்தர்ராஜன் ,சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.