Both husband and wife hanged themselves in the same saree near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் நடுத் தெருவை சேர்ந்த தம்பதியினர் தியாகராஜன் (78), இவரது மனைவி பானுமதி (72). இருவரும் வீட்டருகே பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் கதிரேசன் விழுப்புரம் மாவட்டம் உளிபுரம் கிராமத்தில் சொந்தமாக சோடா கம்பெனி வைத்து அங்கேயே தங்கி பிழைப்பு நடத்தி வருகிறார். மகள் கவிதா அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவருடன் திருமணமாகி வசித்து வருகிறார்.
இந்நிலையில், நீண்ட நேரம் ஆகியும், தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர், சந்தேகமடைந்து, தாழ்பாள் போடால் இருந்த கதவை திறந்து உள்ளே பார்த்த போது, வீட்டு சீலிங் பேனில், ஒரே சேலையில், இருவரும் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தனர். பின்னர். அங்கிருந்தவர் உடல்களை இறக்கி வைத்தனர். பின்னர், பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,
பானுமதிக்கு கடந்த 6 வருடங்களாக உயிர்நிலையில் கேன்சர் வியாதி இருந்து வந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கடந்த 15 நாட்களாக மிகவும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பபடுகிறது. நோயின் கொடுமை தாங்க முடியாமல் கணவன் மனைவி இருவரும் ஒரே சேலையில் ஒன்றாக தூக்கு மாட்டி இறந்து விட்டனர் என்பதும் முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது.
கணவன் – மனைவி இருவரும் ஒரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,