breakfast plan; In Perambalur district schools shortage of cooking items like gas, rava, semiya!

 

தமிழ் நாட்டில் ஏழை எளிய மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கொண்டு வந்தார். அதன் பின்னர் முதலமைச்சராக வந்த எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டமாக மாற்றினார். பின்னர் முதலமைச்சராக வந்த கருணாநிதி சத்துணவில் முட்டை கொண்டுவந்தார்.

தற்போது, முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் காலை உணவுத்திட்டத்தை கொண்டு வந்து அமுல்படுத்தி உள்ளார். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நல்ல வசதியாக உள்ளது. காலை உணவுத்திட்டம் மதிய உணவுத்திட்டத்தை போல் ஒரே மாதிரியான உணவாக இல்லாமல் பொங்கல், கேசரி, கிச்சடி என வகைகளிலும், நல்ல கிடைப்பது மாணவர்களுக்கும் பிடித்ததாக உள்ளது.

இத்திட்டம் ஏழை எளிய மாணவர்க்கு மட்டும் அல்லாமல், ஆதரவற்ற, பெற்றோரை இழந்த, குறிப்பாக தாயாரை இழந்த குழந்தைக்கு இத்திட்டம் பேரூதவியாக இருக்கிறது. மேலும், காலை உணவு பள்ளியில் வழங்கப்படுவதால், மாணவர்கள் உரிய நேரத்திற்கு வகுப்புகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

நல்லத் திட்டமான இத்திட்டம், தற்போது, கேஸ், ரவா, சேமியா உள்ளிட்ட சமைக்கும் மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் பொருட்கள் வழங்கப்படாததால், மாவட்டத்தின் முக்கிய உயர் அதிகாரி ஒருவர், ஊராட்சி தலைவர் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் ஸ்பான்சர் பெற்றுக் கொள்ள கூறியாக ஆடியோவும், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு நல்ல இத்திட்டத்தில், சுணக்கம் ஏற்படாத வகையில் உடனடியாக தலையிட்டு, சமையல் பொருட்கள் வினியோகத்தை செம்மைப்படுத்தி நல்ல பெயரை தக்க வைத்து கொள்ள வேண்டும என அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

 100 சதவீத மாணவர்களும் பள்ளி வருகை தந்து, காலை உணவை பள்ளியில் சாப்பிடுகின்றனர். இதனால் ஏற்கனவே, கொடுத்த பொருட்களை சமைத்ததால் தீர்ந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. விரைவில் பொருட்களை வழங்க மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு, திட்டத்தை நிறைவேற்றும் ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!