Breakfast Plan: Tomorrow morning, Perambalur Aranarai School begins! Municipal Councilor Durai. Kamaraj Information!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால், கடந்த செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளன்று, மாதங்களுக்கு முன்பு, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதன் அடுத்த கட்டமாக அரணாரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , நாளை காலை சுமார் 8 மணி அளவில், காலை உணவு திட்டத்தினை, கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ,மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சி துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் (பொ) ராதா ,மற்றும், திமுக கட்சி நிர்வாகிகள் , அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டும என பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர் துரை.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!