Breakfast Scheme: Appointment of 95 Responsible Officers to Monitor: Perambalur Collector Notification!

பழைய படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள தொடக்கப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நல தொடக்கபள்ளிகள், பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் 263 பள்ளிகளைச் சேர்ந்த 16,020 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் 25.08.2023 அன்று விரிவுபடுத்தபப்ட்டது.

25.08.2023 அன்றே ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்குத் தேவையான உணவுப்பொருட்களை செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டும் என்று அரசால் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து பள்ளிகளுக்கும் அடுத்த ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப்பொருட்கள் 22.09.2023 வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது, மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தரமான சுகாதாரமான சுவையான உணவு வழங்கப்படுகின்றதா உள்ளிட்டவற்றை கண்காணிக்க அனைத்துத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து 95 பொறுப்பு அலுவலர்களை நியமித்து பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு அலுவலருக்கும் இரண்டு முதல் நான்கு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொறுப்பு அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் காலை உணவு தயாரிக்கும் பணி காலை 6.00 மணிக்கு துவங்கி, காலை 8.15-க்குள் முடிக்கப்பட்டு, காலை 8.45-க்குள் மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கப்படுகின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், உணவுப்பொருட்கள் அக்போபர்-2023 மாதம் உள்ள பள்ளி வேலை நாட்களுக்கு போதுமான அளவு உள்ளதா என்பதனையும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், எரிவாயு உருளைகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும் என்றும், உணவு தயாரிக்கும் செலவினங்களுக்காக மைய பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட தொகை அவர்களுக்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்தல் வேண்டும் என்றும், பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இத்திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் தங்களின் ஆய்வுப்பணி குறித்த விரிவான அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்: https://dsmatrimony.net/

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!