Breakfast Scheme in Tamil Nadu Govt Schools : Perambalur Collector Venkatabriya at Aranarai inaugurated in the presence of MLA Prabhakaran!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலுார் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் இன்று காலை தொடங்கி வைத்தார்.

மாணவர்கள் எக்காரணத்திற்காகவும் பள்ளி செல்லாமல் இருந்து விடக் கூடாது, கல்வியில் இடைநிற்றல் கூடாது என்பதற்காகவும், அனைத்து மாணவர்களுக்கும் கல்வி சீராக, சமமாக, தரமாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மாணவர்களுக்கென பல்வேறு சிறப்பான திட்டங்களை வகுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

நகரம் மற்றும் கிராம பகுதிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள், மாணவர்கள் காலையிலேயே புறப்பட்டு விடுவதாலும், சிலருடைய குடும்ப சூழல் காரணமாகவும் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதில்லை என்பதால் பள்ளி மாணவர்களுக்கு சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டம் முதல் கட்டமாக முத்து நகர், பெரம்பலூர் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய 3 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 112 பள்ளிக் குழந்தைகளுக்கு தொடங்கப்பட்டது.

மாணவ, மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டதால் பள்ளிக்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், அரணாரையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 69 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கலெக்டர் வெங்கடபிரியா இன்று காலை பெரம்பலுார் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவை பரிமாறினார்.

நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் (பொ) ராதா, முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சீனிவாசன், கவுன்சிலர்கள் துரை.காமராஜ், சாலினி, ரத்னம் மற்றும் உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார், அரணாரை திமுக கிளைக் கழகம் மற்றும் பெரம்பலூர் நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!