Briefing meeting with political parties on election rules of conduct: Held at Perambalur Collector’s office!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் தலைமையில், எஸ்.பி ஷ்யாமளாதேவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில், இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது முதல் உடனடியாக மாதிரி நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை நடத்தை விதிகள்அமலில் இருக்கும். வாக்குச்சாவடி மையத்தின் 100 மீட்டர் சுற்றளவிற்குள் வாக்காளர்களிடம் தேர்தல் பிரச்சாரம் செய்திடக் கூடாது வாக்களிக்கும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர்தல் பிரச்சராங்கள் மேற்கொள்வது, ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது போன்றவை தவிர்த்திட வேண்டும். வாக்களர்களை வாக்குச்சாவடி மையத்திற்கு வாகனத்தில் அழைத்து வந்து அழைத்து செல்வதை தவிர்த்திட வேண்டும்

தனி நபர் நிலங்கள், கட்ட்டங்கள், சுற்றுச் சுவர் ஆகியனவற்றில் உரிய அனுமதியின்றி கொடி நடுதல், பேனர்கள் வைத்தல் மற்றும் போஸ்டர்கள் ஒட்டுதல் போன்றவற்றினை தவிர்த்திட வேண்டும். பிற கட்சியினர் நடத்தும் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில், அரசியல் கட்சியனர் அல்லது வேட்பாளரின் ஆதரவாளர்கள் இடையூறு செய்திடக் கூடாது.

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை உள்ளூர் காவல் துறை அலுவலர்களிடம் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். கூட்டங்கள் பேரணிகள் நடத்திட Suvidha எனும் இந்த்திய தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முதலில் வரப்பெறும் விண்ணப்பங்கள் முதலில் பரிசீலனை செய்யப்படும். விண்ணப்பங்கள் ஒற்றை சாளர முறையில் Single Window System மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தடையின்மை சான்று பெறப்படும். கூட்டம் நடைபெறும் இடம் தடை செய்யப்ப்ட்ட பகுதியா அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதியா என்பதை முன்கூட்டி தெரிந்து கொண்டு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுக்குட்பட்ட நடந்து கொள்ள வேண்டும்.

பேரணிகள் நடத்தப்படும் நாள் மற்றும் நேரம் ஆகியனவற்றினை முன்கூட்டியே தீர்மானித்துக கொள்ள வேண்டும். பேரணி ஆரம்பிக்கும் இடம் முடியும் இடம் ஆகியனவற்றினை இறுதி செய்து கொள்ள வேண்டும். பேரணி வழித்தடத்தில் மாற்றங்கள் ஏதும் செய்திடக் கூடாது. பேரணியில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அனுமதி ரத்து செய்யப்படும்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு அளித்து, வாக்குபதிவு சுதந்திரமாக நடைபெற ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். அனுமதிக்கப்பட்ட முகவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும். வாக்களர்களுக்கு வழங்கிடும் அடையாள சீட்டில் வேட்பாளர் பெயர் அல்லது கட்சியின் பெயர் இல்லாமல் வெள்ளைத் தாளில் குறிப்பிட்டு வழங்கிட வேண்டும். வாக்குச்சவாடி மையங்களின் அருகே வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை, தேர்தல் நாளன்று போஸ்டர்கள், கொடிகள், சின்னங்கள் அல்லது வேறு வகையான பிரச்சார பொருள்கள் பயன்படுத்திட அனுமதி இல்லை.

அதேபோன்று வேட்புமனு தாக்கல் செய்திட வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே வர வேண்டும். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 20.03.2024 அன்று முதல் 27.03.2024 வரை தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் மதியம் 3 மணிக்குள் வந்தவர்களிடம் மட்டுமே வேட்புமனு பெறப்படும். வேட்புமனுக்கள் பரிசீலனை 28.03.2024, வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 30.03.2024 ஆகும். 19.04.2024 அன்று வாக்குப்பதிவும், 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். ஆதவ் பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளை, தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றி வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெற அனைவரும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது,

அதனைத்தொடர்ந்து அச்சக உரிமையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்ளுடனான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!