Bronze idol found near Perambalur: Revenue and police investigating!

பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் கிராமத்தில், நரிக்கரடு என்ற பகுதியில் மழைநீர் செல்லும் ஒரு வாய்க்காலில் ஒரு அடி உயரமுள்ள 5 கிலோ எடை கொண்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட அம்மன் சிலை சேதமடைந்த நிலையில் மாடு மேய்த்து கொண்டிருந்த மஞ்சுளா என்பவர் அளித்த தகவலின் பேரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரம்பலூர் வடக்கு நிர்வாக அலுவலர் அகிலன் அளித்த தகவலின் பேரில், வருவாய்த்துறையினர் சிலையை கைப்பற்றி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து, அந்த அம்மன் சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது? எந்த கோவாலுக்கு சொந்தமானது? யார் இதனை திருடி இப்பகுதியில் வீசி சென்றது இதன் மதிப்பு எவ்வளவு என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மழைநீர் செல்லும் வாய்க்காலில் அம்மன் சிலை புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோனேரிப்பாளையம் பகுதியில் உள்ள பொது மக்கள் மத்தியில் பெரும் பக்தி பரவச பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!