Building engineers demonstrated at Perambalur demanding the price rise of sand prices

பெரம்பலூர் : மணல் விலை ஏற்றத்தை கண்டித்தும் பத்திர பதிவை முறைபடுத்த கோரி பெரம்பலூரில் கட்டிடப் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் பாலக்கரை அருகே ஆட்சியர் நுழைவு வாயிலில் அனைத்து கட்டிட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், கட்டுநர்கள், கட்டிட தொழிலாளர்கள் , டிப்பர் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பலர் கலந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், மணல் விலை ஏற்றத்தை குறைத்து, நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மணல் குவாரிகளை அதிக அளவில் திறந்த மாவட்டத்திற்கு ஒன்று அல்லது இரண்டு ஸ்டாக் யார்டுகளை அமைக்க வேண்டும்.

மாற்று மணல் (M-sand) உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், கட்டுமானத்துறைக்கென தனி அமைச்சகம் அமைப்பதுடன், அத்தியாவசிய விலைப் பட்டியலின் கீழ் கொண்டு வந்து அரசே விலை நிர்ணயிக்கவும்,

உள்ளூர் திட்ட குழுமத்தில், குறைந்த பட்சம், கூட்டமைப்பின் 2 உரிமம், பெற்ற கட்டிட வரையாளர்கள் , பொறியாளர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும்,

தரைதள பரப்பு விகிதம் அனுமதி அண்டை மாநிலத்தில் உள்ளது போல், தமிழகத்திலும் அதிகப்படுத்த வேண்டும், இதற்கு ஈடாக பக்க திறவிட அளவுகளை குறைக்க வலியுறுத்தியும்,

உரிமம் பெற்ற கட்டிட வரையாளர் தமிழகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் பதிவு செய்து இருந்தால் அவர்கள் தமிழகம் முழுவதும் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும்,

அரசாங்க கட்டுமான ஒப்பந்த பணிகளில் பொறியாளர்களுக்கு என குறைந்தபட்சம் 25 சதவீதம் ஒப்பந்த பணிகள் அளிக்க வேண்டும்,

கட்டிட வரைபட அனுமதி அரசியல் அமைப்பு சட்டம் 74வது திருத்தத்தின்படி உள்ளாட்சியிலேயே அனுமதி அரசு தரவேண்டும்,

பத்திரபதிவுத்துறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி நடைமுறைக்கு ஏற்ற விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை அடங்கி மனுவை வழங்கினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!