Burned body of a man near Perambalur new bus station!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூம் பின்புறம், இன்று காலை அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் இன்று நள்ளிரவு சுமார் 12 மணியிலிருந்து நான்கு மணிக்குள் எரித்து கொன்று இருக்கலாம். இறந்த வாலிபர் எந்த ஊர்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார். காதலா? கள்ளக்காதலா? அல்லது சொத்து தகராறா! அல்லது குடிபோதையில் ஏற்பட்ட தகராறா! என்ற பல்வேறு கோணங்களிலும் , இறந்த வாலிபர் எந்த ஊர் யார் என தீவிரமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.