Bus accident: The Tamil Nadu transport minister was involved in rescue work for half an hour!

கடலூர் மாவட்டம், வேப்பூரில் இருந்து, விருத்தாசலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து எதிர்பாரா விதமாக விபத்துக்குள்ளாகி வாய்க்காலில் தலைகீழாக கவிழ்ந்ததில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

அவ்வழியாக வந்த தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருந்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் மீட்பு பணியில் ஈடுபட்டார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வசதி செய்து தரக் கோரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்தில் மீட்பு பணியில் அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் ஈடுபட்டார்.

இதை பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டி சென்றர். சாதாரண எம்.எல்.ஏக்கள் உட்பட அரசியல்வாதிகள் விபத்து நடந்தால் கார் கண்ணாடியை ஏற்றிக் கொண்டு மாற்று வழியில் செல்லும் நிலையில் அமைச்சர் சாமனியனை போல் மீட்பு பணியில் ஈடுபட்ட சம்பவம் பாராட்டுக்குரியது.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!