Bus on the new route to Ariyalur – Kanyakumari via Kolakanatham; Minister Sivasankar started.

அரியலூரில் இருந்து கன்னியாகுமரிக்கு, புதிய வழித்தடத்தில், அரசு விரைவு பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அதனை நிறைவேற்றும் விதமாக நேற்று, 125 k என்ற புதிய வழிதடத்தில் , அரியலூர், கொளக்காநத்தம், திருச்சி, மதுரை, நாகர்கோவில், வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் கொளக்காநத்தம் கிராமத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். தினமும் இரவு 7.15 மணிக்கு அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்து 464 கிலோமீட்டர் பயணம் செய்து கன்னியாகுமரி வரை செல்ல உள்ளது, பயணிகளின், பொதுமக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இணையதள முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என். கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர் என்.ராகவன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள், தொ.மு.ச. பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!