Bus overturns in ditch near Perambalur as driver falls asleep; 30 people injured!
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் ஒன்று 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதனை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அர ஒதியத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த வடிவேல் மகன் காந்தி 42 என்பவர் ஓட்டி வந்தார். பஸ் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை கடந்து தண்ணீர் பந்தல் அருகே சென்ற போது, டிரைவர் கண் அயர்ந்ததால், பேருந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பயணிகள் 30 பேருக்கும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். பயணிகள் அனைவரும் அவ்வழியாக சென்ற மற்ற பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்