Bus tariff hike: Students struggle: holiday for college near Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதே போன்று, புதுவேட்டக்குடி பகுதியிலும், போராட்டம் நடத்தி வந்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் மற்றும் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், அந்த கல்லூரிக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டது. மேலும், துறையூர் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் செட்டிக்குளம், வேலூர் வழிகளில் திருப்பி விடப்பட்டது.