Buses crash near Perambalur: 2 killed!
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பாடாலூர் அருகே முன்னால் சென்ற பேருந்து, கார் மற்றும் அடுத்தடுத்து 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில், 2 பேர் பலியாகினர். மேலும், 11 பேர் காயமடைந்தனர்.
லதா டிராவல்ஸ் ஆம்னி பேருந்து சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த , ஆம்னி பேருந்து பாடாலூர் அருகே சென்ற போது எதிர்பார திடீரென பிரேக் செய்யதால், பின்னால் வந்த இன்னோவா கார் ஆம்னி பஸ் மீது மோதியது. காருக்கு பின்னால் வந்த பர்வீன் டிராவல்ஸ் திடீரென பிரேக் பிடித்ததால், அதன் பின்னால் வந்த ரெங்கநாதன் டிராவல்ஸ் ஆம்னி பேருந்தும், கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குருவம்பட்டியை சேர்ந்த ரெங்கநாதன் ஆம்னி பஸ் கிளீனர் வெள்ளைச்சாமி மகன் விஜய் (24) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதடித்து உயிரிழந்தார். பஸ்சில் பயணித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பஷீர்கான் மகன் பர்கான் (6), காயமடைந்து சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் செல்லும் வழியில் உயிரிழந்தான்.
மேலும், 3 ஆம்னி பேருந்துகள் மற்றும் காரில் பயணித்த 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.