Business Loans with Subsidy for Manufacturing, Service-based Industries: Perambalur Collector Information!
குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25% முதல் 35% வரை மானியத்துடன் கூடிய உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் இத்திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று சுய தொழில் செய்ய விரும்பும் ஆர்வமுள்ள பயனாளிகளிடமிருந்து http://www.kviconline.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவின் கீழ் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், சேவை பிரிவின் கீழ் 5 லட்ச ரூபாய்க்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும். குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர்கள் மற்றும் உச்ச வயது வரம்பு கிடையாது.
மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 89255-33976, 89255-33977 என்ற தொலைபேசியிலோ அல்லது மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அணுகலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.