Businessman DATO S PRAKADEESH KUMAR set up a fresh vegetable market at Poolampadi near Perambalur for Home town farmers to rise in life.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ளது பூலாம்பாடி பேரூராட்சி. இந்த ஊரில் பிறந்து, பெரம்பலூர் ராமக்கிருஷ்ண பள்ளியில் 4ம் வகுப்பு வரை படித்து விட்டு பூலாம்பாடி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு வரை பயின்று, பொறியாளர் பட்டதாரி பிரகதீஸ்குமார். வேலை தேடி மலேசியா சென்றார். அங்கு தொழில் செய்தார். முதலில் படுநஷ்டமடைந்தார். பின்னர், மனம் தளாராமல், தன்னுடைய அயராத உழைப்பால் இன்று வியாபாராம் செய்ததில் 20 நாடுகளில் கொடி கட்டி பறக்கிறது. மலேசியா அரசு அவருக்கு, அந்நாட்டடின சிறந்த பட்டமான “டத்தோ” பட்டத்தை வழங்கி உள்ளது.

பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் ஒதுக்குப்புறமாகவும், வறட்சியான வானம் பார்த்த பூமி ஓர் புறம், மற்றொரு புறம் பச்சைமலைத் தொடர் அடிவார பகுதியாக இருந்தாலும், பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள விவசாய நிலங்களை வைத்து கொண்டு விவசாயம் செய்து வருவதை பார்த்த அவருக்கு என்ன செய்தால் இவர்கள் முன்னேற வைக்க முடியும் என யோசித்த அவர், உழவர்கள் உழைப்பாளையே அவர்கள் முன்னுக்கு கொண்டு வரவேண்டும், ஆப்பிக்காக போன்ற நாடுகளில் விவசாயம் நல்ல லாபகரமான தொழிலாக இருக்கும் போது நம்மூர் விவசாயிகள் ஏன் இன்னும் இப்படியே உழுக்கு மிஞ்சாமல் வேலை பார்க்கிறார்கள், அவர்களின் பணித்தன்மையை மாற்றும் விதமாக வேளாண்வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என பல தரப்பட்ட துறைகளை ஒன்றினைத்து மிக குறைந்த தண்ணீரில் கூட ஓர் ஏக்கர் அளவில் காய்கறி பயிரிட்டு விற்பனை செய்தவன் மூலம், மாதம் ஒன்றிற்கு குறைந்த பட்ச வருவாய் மாதம் ரூ. 30 – 45 ஆயிரம் வரை ஈட்ட முடியும், மேலும், கறவை மாடு, சாணம் உள்ளிட்டவைகள் மூலம் கூடுதல் உபரி வருமானம் பெற்று வாழ்வில் தன்னிரைவு அடைந்து நல்ல நிலை கிடைக்கும் என்பதை கண்டறிந்த அவர் அதற்கா காய்கறி சந்தை அமைக்கும் பணியினை மேற்கொண்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொய்வின்றி , அவருடைய பிளஸ்மேக்ஸ் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் என கடும் பணி செய்தனர். இதனால், பூலாம்பாடி, அரும்பாவூர், வேப்படி -பாலக்காடு, பெரியம்மாபாளையம், கடம்பூர், கள்ளப்பட்டி, மலையாளப்பட்டி, மேட்டூர், அய்யர்பாளையம், வீரகனூர் உள்ளிட்ட பல பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு தொடங்கப்பட்டது. அதில், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டது.

இன்று பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் ஒட்டன்சத்திரத்திற்கு நிகரான பெரிய காய்கறி சந்தையை கொண்டு வரவேண்டும் என்ற பெரிய இலக்குடன் இன்று தொடங்கப்பட்டு முதல் நாளே 7 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகளோ, விற்கும் விவசாயிகளோ எந்த வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இதனை பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழுசார்பில் தொழிலதிபர் டத்தோ. பிரகதீஸ்குமார் செலுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புதிய காய்கறி சந்தை தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்று பதிவாக மாறி உள்ளது, மேலும், இங்கிருந்து, தலைவாசல்,சேலம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும், எதிர் காலத்தில் வாய்ப்பு இருந்தால், வெளிநாட்டிக்கும் காய்கறிகள் ஏற்று செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று, பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா பிளஸ் மேக்ஸ் நிறுவனர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமை வகித்தார். கலெக்டர் கற்பகம், போலீஸ் ஷ்யாம்ளாதேவி, எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட வன அலுவலர் குகனேஷ், ரோவர் வேளாண் கல்லூரி துணைத்தாளாளர் ஜான்அசோக் வரதராஜன், ஓய்வுபெற்ற டிஜிபி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டார். விழாவின் தொடக்கமாக தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்கச் செயலாளர் எ.கே.ராமசாமி அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி வைத்ததனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன காய்கறிசந்தை பெயர்ப்பலகையை திறந்துவைத்தார். பின்னர் அவர் பேசும் போது, நம்முடைய அன்பு சகோதரர் பிரகதீஸ்குமார் அவர்கள் தொடர்ந்து இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கான பணிகளை செய்வதாக இருந்தாலும், பூலாம்பாடி பேருராட்சி வளர்ச்சிக்கு ஆற்றுகின்ற பணியாக இருந்தாலும், நாம் அனைவரும் அறிந்தது. இந்தப் பேரூராட்சி நம் மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் இருந்தாலும் இன்று மக்கள் உற்று நோக்குகிற பகுதியாக வளர்ந்து வருகிறது என்றால் அதற்கு காரணம் அன்புச் சகோதரர் பிரகதீஸ்குமார் இந்த ஊர் வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக இந்த ஊர் நூலக வளர்ச்சியாக இருந்தாலும், மக்களுடைய சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பாக இருந்தாலும், அதே போல நமக்கு நாமே திட்டத்தில் பல்வேறு சாலைப்பணிகளை அமைத்திருப்பதாக இருந்தாலும், இந்த ஊர் வளரவேண்டும். தான் பிறந்த மண்ணை பெருமை பெறவேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கிறார். அதிலே அடுத்த கட்டமாகத்தான் இன்றைக்கு இந்தப்பகுதியிலே இருக்கின்ற விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு ஒரு அமைதிப் புரட்சியை செய்துகொண்டிருக்கிறார். இந்த நிகழ்வின் மூலமாக உற்பத்தி செய்கின்ற விவசாயிகளையும் வாங்க முனைபவர்களையும் ஓரிடத்தில் சந்திக்க வைக்கின்ற சிறப்புமிகு நிகழ்வு. தலைவர் கலைஞர் துவக்கிவைத்த உழவர்சந்தையை போன்று உள்ளது.

ஆனால் அரசினுடைய பங்கெடுப்பு வருவதற்கு முன்பாக தன்னுடைய முன்னெடுப்பாக தன் மூலமாக இப்பகுதி மக்கள் முன்னேற வேண்டும் அதற்கான பணியை செய்யவேண்டும் என்று சிறந்த காரியத்தை செய்திருக்கிறார். டத்தோவிற்கு தொழில் நிமித்தமான பணிகளும் மற்ற பணிகளும் அதிகம். அதிலே வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் பூலாம்பாடிக்கு வருகை தந்து இங்கே என்ன பணிகளை நாம் அடுத்த கட்டமாக மேற்கொள்வது, எது செய்தால் இப்பகுதிமக்களுக்கு வளர்ச்சி வந்து சேருமென்று அவர் பார்த்து பார்த்து செய்கிற காரியமாகத்தான் ஒவ்வொரு காரியமும் இருக்கும். அந்த வகையில் இந்த தினசரி காய்கறி சந்தை என்பது தலைவாசல், ஒட்டன் சத்திரம் காய்கறி மார்க்கெட் போன்று வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களது பிளஸ்மேக்ஸ் நிறுவனம் சார்பில் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் பணியை மேற்கொள்ளுமாறு இந்தமாவட்ட மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இந்த மாதிரி எங்க தொகுதியில் எங்களுக்கு கிடக்கவில்லை என்பது வருத்தம்தான். குன்னம் பகுதியிலே விளைகிற சோளத்திற்கு உரியவிலை கிடைக்கவேண்டும் என்பதற்கு மார்க்கெட்டிங் கமிட்டி அமைக்கவேண்டும் என்ற திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே போன்றுதான் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்த நல்ல வாய்ப்பை பிரகதீஸ்குமார் ஏற்படுத்தி தந்திருக்கிறார். எந்த நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோமோ அந்த நோக்கத்தோடு அவரும் இருக்கிறார் என்ற அந்த சிறப்பான எண்ணம்தான் அவரை வாழ்க்கையில் இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளது. மக்களுக்கு உதவுவதுதான் முதல் பணி என்று நினைப்பதால்தான், அவர் இந்த அளவிற்கு உயரத்தில் இருக்கிறார்.

இதுபோன்று விவசாயிகளின் நலன் சார்ந்த அமைப்புகளுக்கும், குழுக்களுக்கும் தமிழக அரசும் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகிய தானும், அனைத்து விதமான உதவிகளையும் செய்வோம் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதி அளித்தார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த டத்தோ பிரகதீஸ்குமார் பேசும் போது, நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் தான். நான் பள்ளிக்கு போகும் போது வயல் வேலைகளை பார்த்துள்ளேன். நான் மட்டும் வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. என்னுடன் சேர்த்து பூலாம்பாடியும் வளர்ச்சி அடைய வேண்டும். இந்த ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும், நிரந்தர வருவாய் கிடைக்க என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டிருந்தேன். அப்போது விஐபி ராஜாதான் ஒட்டன்சத்திரம், தலைவாசல் பகுதியில் உள்ளது போல் பெரிய அளவில் காய்கறி சந்தை அமைத்துக்கொடுங்கள் என்றார்.

இந்த காய்கறி சந்தையால் நம்பகுதி விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய்கிடைக்கும். இன்று மட்டும் 7 டன் காய்கறி விற்பனை ஆகியுள்ளது. சுமார் 300 ஏக்கரில் காய்கறி பயிரிடப்பட்டுள்ளது. இந்த காய்கறி சந்தைக்கு விற்க மற்றும் வாங்க வருபவர்கள் சந்தைவரி எதுவும் செலுத்த தேவையில்லை.அதை பிளஸ்மேக்ஸ் நிறுவனம் கட்டும், இதனை ஒருங்கிணைத்திட 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ப்ளஸ்மேக்ஸ் நிறுவனமே சம்பளம் வழங்கும்.

நம்பகுதியில் பூலாம்பாடி, அரும்பாவூர், கடம்பூர் என சுற்றுப்பகுதி ஊர்கள் எந்த பிரச்சனையும் இன்றி ஒரே ஊர் போல் இருக்க வேண்டும். அதுதான் என் எண்ணம். இந்த சந்தையால் எனக்கு ஆதாயம் கிடைக்கும் என நீங்கள் நினைக்காதீர்கள். முற்றிலும் நம் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமே காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டத்தோ பிரகதீஸ்குமார் பேசினார்.

அதனைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமாருக்கு விவசாயிகள் பொதுமக்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். நிறைவாக பிளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறிசந்தை ஆலோசகர் விஐபி ராஜா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த விழாவில் டத்தோ பிரகதீஸ்குமார் அவர்களின் தந்தை சூரிய பிரகாசம், கோட்டாட்சியர் நிறைமதி, பிளஸ்மேக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ரந்தினி பிரகதீஸ்குமார், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் டி.சி.பி பாஸ்கரன், வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், பூலாம்பாடி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், பேருராட்சித்தலைவர் பாக்கியலட்சுமி, பூலாம்பாடி கவுன்சிலர்கள், மற்றும் பெருந்திரளான விவசாயிகள் மற்றும் அஸ்வின்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி. கணேசன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!