Businessman Ramkumar takes over as new zonal commander of Perambalur Home Guard
இன்று காலை பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையின் புதிய மண்டல தளபதியாக ஸ்ரீதேவி டிரான்ஸ்போர்ட் கம்பனியின் உரிமையாளரும் , தொழிலதிபருமான ராம்குமார் பொறுப்பு பேற்றுக் கொண்டார். பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி (பொறுப்பு) வி.ஆர். சீனிவாசனை சந்தித்து, பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரியும் 220 காவலர்களுக்கு மண்டல தளபதியாக பொறுப்பேற்று, ஊர்க்காவல் படையை சிறந்த முறையில் வழிநடத்தி, சமூக பணிகளை தொடரவும் தயார் நிலையில் உள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் போலீஸ் எஸ்.பி வி.ஆர். சீனிவாசன் வாழ்த்துகளை தெரிவித்தார். அதோடு, மண்டல தளபதி ராம்குமாருக்கு முக்கிய பிரமுகர்கள், வாழ்த்துகளை தெரிவித்தனர்.