By 2 lakh votes, Pariyavandar has to do to win: VCK Tho.Thirumavalavan

திமுக சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரை ஆதரித்து வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரை ஆதரித்து இன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இங்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் பாரிவேந்தரை இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இது தேர்தலுக்கு ஏற்பட்ட கூட்டணி அல்ல! நோட்டையும், ஓட்டையும் கணக்கிட்டு, கோடிகளை பெற்றுக் கொண்டு சேர்ந்த கூட்டணி அல்ல!
இந்த ஆட்சியில் 2லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து இருக்கிறார்கள், ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி கொள்ளையடித்தில், தேர்தலில் ஒரு தொகுதிக்கு 40 கோடி ரூபாய் செலவு செய்து ரூ. ஆயிரத்து 600 கோடி ரூபாயை இந்த தேர்தலுக்கு செலவு செய்கிறார்கள்.
அதிமுக பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி. ஒரு வியாபார கூட்டணி. அதிமுகவிற்கும் பாஜக ஏற்பட்டுள்ள கூட்டணி பிளாக்மெயில் கூட்டணி. பாமக கூட்டணி நோட்டு 7 சீட்டு 500 கோடி. வாக்கு வங்கி சதவீத அடிப்படையில் ஒரு சதவீதத்திற்கு ரூ.150 கோடி, 2 சதவீத தேமுதிகவிற்கு 300 கோடி, பேரத்தில் உருவான கூட்டணி. நாம், போராட்டத்தில் கை கொடுத்த கட்சிகள் மதசார்பற்ற கூட்டணியில் உள்ளன. நமக்கெல்லாம் நரந்திரமோடி பிரதமர் ஆகக் கூடாது. அது நாட்டுக் நல்லதல்ல! மக்களுக்கு நல்லதல்ல, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து, ஜனநாயகத்திற்கு ஆபத்து, சமூக நல்லிணக்கத்திற்கு ஆபத்து, மக்கள் ஒற்றுமைக்கு ஆபத்து, வாழ்வாதரங்களுக்கு ஆபத்து, ஆகவே, தான் நரந்திரமோடி பிதமர் ஆகக்கூடாது என்று திமுக கூட்டணி விரும்புகிறது.
இந்த தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர் சாதாரண ஆசிரியராக ஆரம்பித்து இன்று பல்வேறு சாதனைகளை படைத்து, அதன் மூலம் எண்ணற்ற பல உதவிகளை கல்வி, மருத்துவ துறைகளில் செய்து வருகிறார். அரசியலில் இல்லாமலேயே பல தொண்டு செய்து வரும் அவர் பெரம்பலூர் தொகுதி எம்பி-யானால், சிறந்த சேவை கொடுப்பார் என நான் உறுதி அளிக்கிறேன். அதனால், என் உயிரினும் உயிரான விடுதலை சிறுத்தைகள் அயராமல் உழைத்து பாரிவேந்தரை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த பிரச்சாரத்தில்.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் காமராஜ், திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், ஐ.ஜேகே மாவட்டத் தலைவர் அன்பழகன், விசிக மண்டல ஒருங்கிணைப்பாளா இரா.கிட்டு விசிக மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், மற்றும் கூட்டத்தில்.ஜே.கே, திமுக, காங்கிரஸ், கொமதேக, த.வா.க., ஐ.யூ,எம்.லீ, கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.