By the election, the black money of politicians came to Rs 10 thousand crores in Tamil Nadu.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலால், தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்திற்கு வந்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் , தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில், சுமாராக ஒரு தொகுதியில் 13 லட்சம் வாக்களாளர்கள் என எடுத்துக் கொண்டால், அதில் ஒரு கட்சி 85 சதவீதத்திற்கும், மற்றொரு கட்சி 75 சதவீத வாக்களர்களை குறிவைத்து கவனிப்பு நடத்தியது. அதாவது வாக்காளர் ஒருவருக்கு தலா ரூ.250 வீதம் இரு கட்சிகள் வழங்கியது. ரூ.500.
அதாவது 80 சதவீத வாக்காளர்களுக்கு (சுமார் 10.5 லட்சம் பேர்) ரூ. 500 எனக் கணக்கிட்டால் ரூ. 52 கோடியே 50 லட்சம், இது மட்டுமில்லாமல், விளம்பரங்கள், வாகனங்கள், பிரச்சார செலவுகள், இதர உணவு, தங்குமிடம், கொடி, தோரணம், வேட்டி, சட்டை, துண்டு, ஆட்கள் செலவு, மது, பிரியாணி, பொதுக் கூட்டம், முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் உள்ள ஏணைய செலவுகள், தொகுதியில் கிளை முதல் மாவட்டம் வரையிலான கவனிப்புகள், என 30 கோடி ரூபாய் அடங்கும், மேலும், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் 20 லட்சம் செலவு செய்தால் கூட 4 கோடி ஆகிவிடும். மேலும், மறைமுக செலவுகள் மற்றும் பெட்டி கொடுத்தல் போன்றவை என கணக்கிட்டால் அனைத்து கட்சிகளின் தேர்தல் செலவுகளும் சேர்த்து தொகுதி ஒன்றுக்கு சுமார் ரூ. 150 கோடி ஆகும். இது நட்சத்திர வேட்பாளர்கள் தொகுதியில் கூடுதல் செலவாகி இருக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், இதே போன்று 40 தொகுதிகளையும் கணக்கிட்டால் ரூ. 6000 கோடி ஆகும், மேலும், பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளை கட்டுக்குள் கொண்டு வர பெட்டி கொடுத்து சுமார் 4000 ஆயிரம் என வைத்துக் கொண்டால் சுமார் 10 ஆயிரம் கோடி கணக்கில் வருகிறது. ஆக மொத்தம் அரசியல்வாதிகள் கணக்கில் வராத கமிசன், கட்டாய நன்கொடை, கையூட்டு என பெற்ற ரூ. 10 ஆயிரம் கோடி தமிழகத்தில் புழக்கத்தில் வந்துள்ளது.
வருமான வரித்துறையினர், அரசுக்கு வருமானம் சேர்ப்பது என்பதை விட அதிகாரிகள் தங்களுக்கு சாதமாகவே வருமானம் பார்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் இன்னும் கணக்கில் வராத கருப்பு பணம் உள்ளதை எவராலும் மறுக்க முடியாது.