Call for ex-servicemen to serve in Assembly General Election: Perambalur Collector Information
நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ளள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021-யை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிகளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் துணை இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலம், பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம் அரியலூர் – 621 704” என்ற அலுவலகத்தை நேரிலோ 04329 -221 011 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.