Calling the Perambalur municipality to pay tax arrears owed to civilian
பெரம்பலூர் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய வரி, வாடகை, கட்டணம் ஆகியவற்றை செலுத்த நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையர்(பொ) தாண்டவமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
பெரம்பலூர் நகராட்சியில் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், பாதாள சாக்கடை வைப்புத்தொகை மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி வரும் மார்ச் 31தேதி வரை உள்ள வேலை நாட்கள் ,விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பழைய மற்றும் புதிய நகராட்சி அலுவலகங்களில் உள்ள கனிணி வரி வசூல் மையம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படும்.
தற்போது நகராட்சி பணியாளர்கள் வரிவசூல் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். வரி செலுத்தாவர்களிடம நேரில் வரி செலுத்தகோரி 3 நாட்கள் அவகாச அறிவிப்பு கடிதத்தை வழங்கியுள்ளனர். எனவே நகராட்சிக்கு செலுத்தவேண்டிய பாக்கிதொகையினை உடனடியாக செலுத்தவேண்டும்.
தொகை செலுத்தாவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் நகராட்சி கடைகளை குத்தகை எடுத்து குத்தகை செலுத்தாவர்கள் கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவ்விதம் செலுத்தாவர்கள் சொத்துக்களின் மீது கோர்ட் மூலம் நடவடிக்கைகள் தொடரப்படும் என தெரிவித்துள்ளார்.