Camping Industry Promotion of credit programs going on today: the young people who are interested can attend: Perambalur Collector
பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கடன் திட்டங்கள் குறித்த தொழில் ஊக்குவிப்பு முகாம் ஆர்வமுள்ள இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார் தகவல்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தொழில் துறையில் தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தை, தொழில் வளர்ச்சியில் முதன்மை மாவட்டமாக உருவாக்கிட படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் பெண்கள் சுயமாக தொழில் துவங்கிட அதிகளவில் முன்வர வேண்டும்.
படித்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கடன் திட்டங்கள் குறித்த தொழில் ஊக்குவிப்பு முகாம் வருகின்ற 20.08.2016 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியா; அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சிறந்த தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு சுய தொழில் எவ்வாறு துவங்கி வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான விளக்கவுரை ஆற்ற உள்ளனர்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் இம்முகாமில் கலந்துகொண்டு சுயமாக தொழில் துவங்கி பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும். மேலும், தகவல்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 04328 291595, 9443413897 ஆகிய என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.