பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள் ,கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கன்னியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கைம் பெண்கள் பிரதிநிதிகள்-4 நபர்கள், பெண் கல்வியாளர்கள்-2 நபர்கள், பெண் தொழில் முனைவோர்கள்-2 நபர்கள், பெண் விருதாளர்கள்-2 நபர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள்-4 நபர்கள் ஆகியோர்களை அலுவல் சாரா உறுப்பினர்களை நியமிக்கப்படவுள்ளதால், தகுதி வாய்ந்த நபர்கள் உரிய விண்ணப்பத்தினை பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் பெற்று கொண்டு, உரிய ஆவணங்களுடன் 18.11.2022-க்குள் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 04328-296209-ஐ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.