Can apply for PM Rashtriya Pal Puraskar Award : Perambalur Collector Information!
புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஆண்டுதோறும் ”பிரதம மந்திரிராஷ்ட்ரிய பால் புரஸ்கார்” விருது 05 முதல் 18 வயதிற்குட்பட்ட தன்னலமற்ற செயல்களைச் செய்த குழந்தைகளுக்கும், வீரதீர செயல்களில் சிறந்த சாதனைகள் செய்த குழந்தைகளுக்கும், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், புதுமைகள் செய்தல், கலை மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவதற்கு தகுதியுடையவர்கள் “https://awards.gov.in/“ என்ற இணையதளத்தில் 31.07.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விருதை பெறுபவர்கள் இந்தியகுடிமகனாகவும், இந்தியாவில் வசிப்பவராகவும், 05 முதல் 18 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த விருது பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ஆம் தேதி ”வீர் பால் திவாஸ்” அன்று அறிவிக்கப்படுவார்கள், என பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.