Can be deposited with drinking water from January 2, 2019: Namakkal Municipal Commissioner

நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன் வெளியிட்டுள்ள தகவல் :

ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது நாமக்கல் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட ஒன்பது ஊராட்சிகளில், குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

அதில் 500 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு உபயோகத்திற்கு ரூ.5ஆயிரமும், வணிக உபயோகத்திற்கு ரூ. 10 ஆயிரமும், 501 சதுரடி முதல் ஆயிரத்து 200 சதுரடி வரை ரூ. 7 ஆயிரத்து 500 முதல் ரூ.15 ஆயிரமும், ஆயிரத்து 201 முதல் 2 ஆயிரத்து 400 சதுர அடி வரை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.

தற்போது அந்த ஊராட்சிகளில்புதிய குடிநீர் இணைப்பு பெற வரும் ஜனவரி மாதம் 2 ம் தேதி முதல் முன்வைப்புத் தொகை பெறப்பட உள்ளது. ஏற்கனவே குடிநீர் இணைப்பு பெற்று கட்டணங்கள் செலுத்தி வருபவர்கள் திருத்தியமைக்கப்பட்ட வைப்புத்தொகையை ஏற்கனவே செலுத்தப்பட்ட வைப்புத்தொகையின் வித்தியாசத்தை கணக்கிட்டு நகராட்சியில் உடனடியாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!