Can we say that the chief minister who lied is an unqualified chief minister? Premalata question in Perambalur campaign?
பெரம்பலூர் சங்கு பிரிவு அருகே இன்று மாலை பெரம்பலூர் எம்.பி தேர்தலில் இரட்டை இலை போட்டியிடும் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
எடப்பாடியார் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி மக்கள் கூட்டணி, தொண்டர்கள் விரும்பிய கூட்டணி, விஜயகாந்த், ஆசிபெற்ற கூட்டணி.
பெரம்பலூர் வேட்பாளராக களம் காணும் இந்த மண்ணின் மைந்தனுக்கு, வாக்களியுங்கள். ஒருவர் எம்.பி. ஆன கல்வியாளர் மற்றொருவர் அமைச்சரின் மகன். அவர்களிடம் இருப்பது பணபலம், நம்மிடம் இருப்பது மக்கள் பலம்.
வெற்றி வேட்பாளர் Mr. சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி செய்ய கேட்டுக் கொண்ட அவர்,
குடிநீருக்கும், விவசாயத்திற்கும் உங்கள் குரலாக ஒலிப்பார். பெரம்பலூரில சிறப்பு பொருளாதார மண்டலம், மருத்துவக் கல்லூரி, துறையூரில் வெங்காயம் விளைவதால் வெங்காய ஜுஸ் தயாரிக்கும் பேக்டரியையும், முசிறியில் பெண்களுக்கான கலைக் கல்லூரி, பாலிடெக்னிக், பஞ்சம்பட்டி ஏரியில் காவிரி நீர் கொண்டு வரவும், காவேரியில் தடுப்பணையும், இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கி தருவார் என உறுதி அளிக்கிறேன்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருகிறேன் என்று மோடியும் சொன்னார். கொடுத்தாரா? இல்லை! பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து ஏமாற்றும் , மத்திய, மாநில அரசுகள் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் இந்த தேர்தலில் புகட்ட வேண்டும், என்றும், பெரம்பலூர் வழியாக அரியலூர் – நாமக்கல் ரயில்வே திட்டத்தையும், பெரம்பலூர், லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை சட்ட மன்ற தொகுதி வளர்ச்சிக்கு வேட்பாளர் சந்திரமோகன் செய்வார் என்பதை வாக்குறதி அளிக்கிறேன் என பேசினார்.
காலையிலே சென்று உங்கள் வாக்கை போட்டுவிடுங்கள் இல்லை என்றால், கள்ள ஓட்டை போட்டு ஏமாற்றி விடுவார்கள். ஆட்சி பலம், அதிகார பலம் அவர்களிடம் இருக்கிறது. மக்கள் பலம் பெரியது என காட்ட வேண்டும் என பேசினார்.
எல்லோரும் சொன்னார்கள் இது 4 பேர் கூட்டணி. இது பலமான கூட்டணி. என்றும் அதிமுகவிற்கும், தேமுதிகவிற்கும் ராசி உண்டு, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சித்தலைவி என ராசி உண்டு பேசினார். 4 ராசியான எண் என தெரிவித்த அவர், வேட்பாளர் சந்திரமோகனிடம் கேட்ட போது அவர் 3 ராசியான சம்பர் என தெரிவித்தார்.
வெற்றி பெறுவதற்கு முன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்த முதலமைச்சர், வெற்றி பெற்ற பின், தகுதியான மகளிருக்கு மட்டும் என அறிவித்துள்ளார். பொய் சொன்ன முதலமைச்சரை தகுதியில்லா முதலமைச்சர் என சொல்லலாமா என்றும்,
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் பேசினார்.
அப்போது, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, மோகன், பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் தமிழச்செல்வன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், சசிக்குமார், நகர செயலாளர் ராஜபூபதி மற்றும் தேமுதிக மாவட்ட செயலாளர் தேமுதிக, புரட்சிபாரதம், எஸ்.டிபி.ஐ கட்சியினர் பலர் திரளாக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.