Cancellation of vacancy notice published under the Nutrition Scheme: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 4 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதிவியாளர் பணியிடங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் அறிவிக்கை எண் 721-2020 சஉதி-1, நாள்: 21.09.2020-ன்படி அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நிர்வாக காரணங்களுக்காக நாளது தேதி வரையில் மேற்கண்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் மேற்காணும் 21.09.2020 அன்று செய்தித்தாளில் வெளியிடப்பட்ட பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவிக்கையை இரத்து செய்து இதன் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வறிக்கை இரத்து செய்வது குறித்து விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையிடுகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.
மேலும், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யப்படுவது தொடர்பான அறிவிக்கை பின்னர் தனியே வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.