Candidate Pachamuthu confirmed that the Government Medical College will be set up at Perambalur if successful as MP

பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்டபட்ட மணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டியில் உள்ள ஜும்மா மசூதியில் இஸ்லாமிய மக்களிடம் ஐ.ஜே.கே, நிறுவனர் டி.ஆர். பச்சமுத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த, அவர் இஸ்லாமிய மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது தன் வாழ்க்கைக்கு வழிகாட்டியது இஸ்லாமிய கல்லூரி எனவும் இஸ்லாமிய பேராசிரியர்களின் அறிவுரையால் தன்னுடைய மேல்படிப்பை தொடர முடிந்ததாகவும் தெரிவித்தார். இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழும் நிலையில் பா.ஜ.க. அரசு பிரித்தாலும் சூழ்ச்சியை செய்கிறது.

இந்துத்வா பிடியிலிருந்து விடுபட அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு மத்திய அரசை அப்புறப்படுத்தப்படவேண்டும் .அப்போது தான் நாட்டுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்தது போலாகும் என்றார். தனிப்பட்ட முறையில் நாங்கள் ஒரு நாளுக்கு 1500 பேருக்கு மருத்துவ உதஙி செய்துவருகிறோம். நான் வெற்றிபெற்றால் பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

வாக்குக் கேட்டபோது இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் பி.ஜெயசீலன், அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திருச்சி மாவட்ட செயலர் கே.எம்.கே.ஹபிபுர் ரஹ்மான் உட்பட ஜமாத்தார்கள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!