Candidate Selection the Jamaat near in Perambalur, contest the elections; Complaint to Election Officer for action

பெரம்பலுார் அருகே உள்ள வி.களத்துாரில் முஸ்லீம் ஜமாத் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுபவரே, போட்டியிட வேண்டும் என நிர்பந்திப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனு கொடுத்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துார் வடக்கு சின்னத் தெருவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் மகன் சபீர் அலி,40, தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மோகனிடம் இன்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

வி.களத்துார் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளின் உறுப்பினர் பதவியிடங்களுக்கும், ஊராட்சி தலைவருக்கும் உள்ளாட்சித் தேர்தல் டிச., 27ம் தேதி நடக்கிறது. வி.களத்துாரில் உள்ள 2, 6, 7, 8, 9, 10 ஆகிய வார்டுகள் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பகுதியாக உள்ளது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி வி.களத்துார் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், ஜமாத் அறிவிக்கும் நபர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேண்டும்.

ஜமாத் அறிவிப்பை மீறி யாரும் போட்டியிடக் கூடாது, வார்டு உறுப்பினராக போட்டியிடுவோர் ஜமாத்திடம் மனு அளித்து, ரூ. 500 செலுத்த வேண்டும். இதில், ஜமாத் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுபவர் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என தெரிவித்துள்ளனர்.

இது, ஜனநாயகத்தை நசுக்கும், சட்ட விரோதமாகும். எனவே, ஜமாத் தலைவர், நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!