Candidates will be examined for election expenses in 3 phases: Election Officer Information

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2021 தொடர்பாக, 147.பெரம்பலூர் (தனி), 148. குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக அரவிந்த் ஜி.தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் விதிகளின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தினசரி வரவு செலவு கணக்கினை தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மூன்று முறை செலவின பார்வையாளரால் ஆய்வு செய்யப்படும். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து 24.03.2021 வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களை 26.03.2021 அன்றும், 25.03.2021 முதல் 28.03.2021 வரை மேற்கொள்ளப்ட்ட செலவினங்களை 30.03.2021 அன்றும், 29.03.2021 முதல் 01.04.2021 வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களை 03.04.2021 அன்றும் ஆய்வு செய்யப்படவுள்ளது.

மேற்கண்ட ஆய்வு கூட்டங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (இரண்டாம் தளம்) காலை 10.00 மணி முதல் நடைபெறும். மேலும், வேட்பாளர;களின் தேர்தல் செவின பதிவேட்டினை ஆய்வுக்காக நிர்ணயிக்கப்பட்ட நாளன்று அளிக்காமலும், விதிகளின்படி உரிய முறையில் கணக்குகளை வைத்திருக்காமலும் இருந்தால், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின் 77ஆம் பிரிவின்படி, அன்றாட தேர்தல் செலவினக் கணக்கினை வைத்து வருவதற்கு தவறியதாக கருதப்பட்டு, இந்திய தண்டனை சட்ட கோவையின் 171-ஐ பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்படுவதுடன், வேட்பாளர் தேர்தலின்போது வாகனங்களை பயன்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட ஆய்வு கூட்டங்களில் வேட்பாளர் அல்லது அவரது முகவர் தவறாது கலந்து கொண்டு, தங்களது செலிவனப் பதிவேட்டினை ஆய்வுக்கு அளிக்க பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!