Cannabis seller arrested near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூரில் உள்ள ஒயின்ஷாப் அருகே உள்ள அரசமரத்தடியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மங்கலமேடு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி தலைமையில், விரைந்து சென்ற போலீசார் ஒருவர் பிளாஸ்டிக் பையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கீழப்புலியூர் அருகே உள் சிறுமத்தூர் குடிக்காட்டை சேர்ந்த முத்துசாமி மகன் குமார் (42) என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைக்கு அனுப்பி வைத்தனர்.