Car – Bike collision near Perambalur; Sacrifice of the young man!
பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவுச் சாலையில், நேற்றிரவு காரும் பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
பெரம்பலூரில் இருந்து நேற்றிரவு சுமார் 11. 4 5 மணியளவில், TN 46 W 7257 என்ற பதிவெண் கொண்ட கார் திருச்சி நோக்கி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் கல்பாடி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் (TN 46 S 4075) கல்பாடி பிரிவு சாலையில் இருந்து நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது காரும், பைக்கும் மோதிக் கொண்டன. இதில் பைக்கில் வந்த நபருக்கு தலை மற்றும் வலது கால் பலத்த காயமடைந்து ரத்து வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் பெரம்பலூர் துறைமங்கல், 4 ரோடு அருகே உள்ள கந்தசாமி மகன் முத்துக்குமார் என்பது தெரியவந்தது. முத்துக்குமாரின் சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.