Car tire explosion near Perambalur 4 people injured
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார், பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக டயர் வெடித்ததால் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில், குற்றாலம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் (61), இவரது மகள் கிருஷ்ணவேணி ( வயது 30) உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.