உரிய ஆணவங்களின்றி 3775 கிலோ அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியினை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணமோ, பொருட்களோ எடுத்துச்செல்லக்கூடாது என்று ஏற்கனவே மாவட்ட தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
இதுபோன்ற விதிமீறல்களை கண்காணிக்க பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ வியூவிங் குழுக்கள் என 14 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் தம்பம்பட்டியிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு 25 கிலோ அளவுள்ள 151 அரிசி சிப்பங்களை லாரியில் ஏற்றி வந்துள்ளனர்.
கிருஷ்ணாபுரத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த கூட்டுறவுத் துறையின் முதுநிலை ஆய்வாளர் ராஜேஸ்வரன் தலைமையிலான குழுவினர் லாரியை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி அரிசி மூட்டையை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.