Cash in Perambalur Rs. 2.25 lakhs theft! Public panic with series robberies

பெரம்பலூர், வடக்கு மாதவி சாலை, கணபதி நகரை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 60). என்.எல்.சி நிறுவனத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர் மருதைமுத்து, இவரது மனைவியின் சகோதரி உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றிருந்தார்.

நேற்றிரவு வீடு திரும்பிய மருதமுத்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் இருந்த ரொக்கம் ரூ. 2லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து மருதமுத்து கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்!

கடந்த சில நாட்காளாக பூட்டியிருக்கும் வீடுகளை மட்டுமே குறி வைத்து கொள்ளையர்கள் முகாமிட்டு திருடி வருகின்றனர்.

பெரம்பலூரில் குறைவான போலீசாரே பணியில் இருப்பதால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை திருடர்கள் சாதகமாக பயன்படுத்தி பெரம்பலூரில் முகாமிட்டு பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வருகின்றனர்.

விதிமுறைப்படி வீட்டைவிட்டு வெளியே செல்பவர்கள் காவல் துறையிடம் முறையாக தகவல் தெரிவித்துவிட்டோ,அல்லது வீட்டிற்கு முழு நேர பாதுகாப்பு கோரி, காவல் துறையில் கட்டணம் செலுத்தி பாதுகாப்பு கோருவதன் மூலம் திருடர்களால் ஏற்படும் இழப்புகளை பொதுமக்கள் தவிர்க்க முடியும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!