CPI(M) supports Perambalur DMK candidate Arun Nehru. State Secretary K. Balakrishnan Vote collection!
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வெற்றி வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெரம்பலூர் புதிய பேருந்து, பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கிராமப்புற ஏழை எளிய மக்களை பசி, பட்டினி இல்லாமல் காப்பாற்றி வந்த நூறுநாள் வேலை திட்டத்தை 28 நாள் வேலை திட்டமாக ஆக்கியவர் மோடி. மீண்டும் அவர் வெற்றி பெற்றால் இந்த திட்டத்தை இல்லாமல் ஆக்கிவிடுவார். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முவ்வராத மோடி அரசு தொழிற்சாலைகளைக்கூட அதானி, அம்பானிக்கு அளித்து வருகிறார்.
தமிழகத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட வராத மோடி ஓட்டு வாங்குவதற்காக தமிழகத்துக்கு வந்தால் அவரை திருப்பி அடிக்கும்விதமாக ஓட்டளிப்பதுதான் நாம் அவருக்கு செய்கிற நன்றிக்கடனாக இருக்கும்.
வெள்ள நிவாரணம் கொடுக்காமல், தமிழர் நலனுக்கு எதுவும் செய்யாமல், தமிழகத்துக்கான திட்டங்களை கிடப்பில் போடுகிறார்கள். எல்லாவிதமான அக்கிரமங்களையும் செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திய மோடி அதற்கேற்றார் போல் நெல், மக்காச்சோளம் விலையை உயர்த்தாது ஏன்,
தேர்தல் நேரத்தில் டெல்லி, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களை சிறையில் அடைத்துள்ளார் மோடி. இந்தியாவில் இதற்கு முன் இப்படி நிகழ்ந்ததுண்டா. தமிழகத்தில் 8 மாதமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்து வைத்துள்ளார் மோடி. மோடியை எதிர்த்தால் அவரை பிடித்து சிறையில் அடைக்கிறார்கள். நமது ஜனநாயக உரிமையை பாதுகாக்க, விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்யாத மோடி, அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்.
30 லட்சம் பணியிடங்கள் மத்திய அரசு நிறுவனங்களில் வேலை காலியாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. வேலையின்மையால் நாட்டில் 8 நிமிடங்களுக்கு ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகிறது. இந்த மோடி ஆட்சி நீடிக்க வேண்டுமா என நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மோடிக்கு காவடி தூக்கி, காவடி தூக்கி காப்புக் காய்த்துப்போன எடப்பாடிதான் இப்போது மாறுவேடம் போட்டு வருகிறார். தாமரையும், இரட்டை இலையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவர்களில் யாருக்கு ஓட்டுபோட்டாலும் ஒன்றுதான். தேர்தல் முடிந்த உடன் இவர்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இவ்வாறு பேசினார்.
பிரச்சாரத்தின்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங், மாவட்ட தலைவர் சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராஜ்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அப்.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர்.அருண் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.