Central and state governments must stop deceiving the people by providing discriminatory education! Request to Prime Minister Modi!

அனைவருக்கும் ஒரே சட்டம் போல், ஏழை – பணக்காரர் என மக்களை வஞ்சிக்காமல், அனைவருக்கும் ஒரே கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கும் பிரதமர் மோடிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் கேந்திர வித்யாலாயா, நவோதயா, ஐ.சி.எஸ்.இ ராணுவப்பள்ளி, சி.பி.எஸ்.இ, மெட்ரிக்குலேசன், இண்டர் நேசனல், மாண்டிச்சோரி, சுயசார்பு கல்வி, ஓபன் ஸ்கூல், அந்தந்த மாநிலங்களின் பாடத்திட்டம் (ஸ்டேட் போர்டு), என பல்வேறு வகையான பாடத்திட்டங்களை கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால் தரமான கல்வி எது என்பது மக்களை குழப்புகிறது. எது படித்தால் மாணவர்களுக்கு நல்லது என தெளிவும் பெற முடியவில்லை.

இந்தியா முழுவதும் ஒரே சட்டம் இருப்பதை போன்று, ஒரு கல்வி முறை பாடத்திட்டத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். பள்ளிகள் நடத்துவேர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மற்றும் அவரது பினாமிகள் என்பதால் இதனை யாரும் கண்டுகொள்வதில்லை. மேலும், அரசியல் கட்சியினர் அதிக அளவு நன்கொடை மற்றும் மறைமுக பலன்களை பெறுவதால், இது குறித்து எந்தவொரு கட்சியும் குரல் எழுப்புவதில்லை. தேர்தலின் போது 500 கொடுத்தால் போதும் என்ற மனநிலைக்கு அரசியல் கட்சிகள் வந்துவிட்டனர். சமூக ஆர்வலர்களும் சலிப்படைந்து விட்டனர்.

வேறு ஒரு கல்வி முறை பாடத்திட்டம் கொண்ட பள்ளிக்கு மாணவர்களும், நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளும் போது, குறிப்பிட்ட பாடத்திட்டம் கொண்ட பள்ளியில் பயிலும் மாணவர்கள் வெற்றி பெறும் வகையிலும், பிற மாணவர்கள் பின் தங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

ஒரே மாதிரியான கல்வி கிடைத்தால் பொருளாதாரத்தில் உயர்ந்த சமூகத்தினருடன் சாமானியர்கள் போட்டி போட முடியும் என்பதோடு வேலை வாய்ப்பு, மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில், வணிகம் போன்றவற்றிலும் சீரான சமநிலை கிடைக்கும்.

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னர், கல்வி விலை பொருளாக மாறி வருவது தடுக்கப்படும். எனவே, மத்திய மாநில அரசுகள் இணைந்து இதற்கான தீர்வை எட்ட நடடிவக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய பிரதமராக இருக்கும் மோடி போன்றவர்களே இதை செய்ய முடியும் என்பதால் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மற்ற கட்சியினரை விட பிஜேபி கட்சியில் இருப்பவர்களள் குறைவான பள்ளிகளை நடத்துவதாக தெரிய வந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!