Central Organisation of Tamil Nadu Electricity Employees: in special Council meeting circular.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு பெரம்பலூர் – அரியலூர் வட்ட சிறப்பு பேரவை கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்ட தலைவர் ஆர்.இராஜகுமாரன் தலைமை வகித்தாh;. நிh;வாகிகள் எம்.பன்னீர்செல்வம், எஸ்.காசிநாதன், பி.நாராயணன், வி.தமிழ்செல்வன், ஆர்.கண்ணன், இ.குணசேகரன், பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் அனைவரையும் வரவேற்றார்.
மாநில துணைத் தலைவர் கே.அம்பிகாபதி நடந்து முடிந்த 15வது மாநாட்டு முடிவுகள் பற்றி விளக்கி சிறப்புரையாற்றினார். மின் வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள், ஒப்பந்த களப்பணி ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு 1.12.2015 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், தமிழக மின்வாரியத்தில் புதிதாக துவங்கப்பட்ட அலுவலகங்களுக்கு பகுதிநேர ஊழியர்கள் நிரப்ப வேண்டும், மின்வாரியத்தில் பொறியாளர் நியமனம், மற்றும் இடம் மாறுதலில் அரசியல் தலையீடு தடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்டப் பொருளாளர் கே.கண்ணன் நன்றி கூறினார்.