Certificate of Appreciation, Prize for girls under 18 years of age who have done heroic work for the betterment of girl child; Perambalur Collector Information!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசால் 2023-24 ஆம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் மாநில அரசின் விருதிற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த பெண் குழந்தைக்கு மாநில அரசின் பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.1,00,000/-(ரூபாய் ஒரு இலட்சம்) காசோலை வழங்கப்படும். தகுதி வாய்ந்த நபர் உரிய விபரங்களுடன் 16.12.2023 முதல் 31.12.2023 மாலை 5.00 மணிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்திடுமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
இவ்விருது பெற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல் , பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு , பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் , வேரு எதாவது வகையில் சிறப்பான / தனித்துவமான சாதனை செய்திருத்தல் , பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் , மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல் , ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல். மேற்காணும் தகுதியுடையோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம், என கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.