chain snaching flush with woman on bike near Perambalur : Survivor with bloody wounds in falling down!
பெரம்பலூர், அன்பு நகரை சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி குமாரி (49). இவர் இன்று மாலை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும், மணிமாறன் மனைவி லட்சுமி (31), வீட்டின் காதணி விழாவிற்காக, பெரம்பலூரில் இருந்து நக்கசேலத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.
இன்று மதியம் 3.30 மணியளவில் அம்மாபாளையம் பெட்ரோல் பங்க்அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த கருப்பு கலர் டீசர்ட் சிவப்பு கலர் கோடு போட்ட அடையாளம் தெரியாத 2 பேர்கள், ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த குமாரியின் கழுத்தில் இருந்த 3.5 பவுன் தாலிக் கொடியை பிடிங்கினர்.
இதில் நிலைகுலைந்த ஸ்கூட்டியில் இருந்து விழுந்த குமாரிக்கு தலையின் பின் பக்கத்தில் ரத்தகாயம் ஏற்பட்டது. வழிப் போக்கர்கள் அங்கிருந்த வண்டி மூலம் அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு, 3 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கபட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் கிடைத்த தடயங்கள் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி. கேமரா காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம், களரம்பட்டி, அம்மாபாளையம், மங்கூன் வேலூர், சத்திரமனை, லாடபுரம், குரும்பலூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
போதிய அளவிற்கு போலீசார் இல்லாததால், வழக்குகளை தீவிரம் காட்ட முடியாமல் போலீஸ் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.