Change the name of a forged document by a strap, Namakkal Police registered a case on two persons
நாமக்கல் அருகே போலி ஆவணம் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்த இருவர் மீது நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் மணிக்கட்டிபுதூரைச் சேர்ந்த நடராஜன். இவருக்கு சொந்தமான நிலத்தை, அவரது சித்தப்பா பொன்னுசாமி என்பவர் தனது பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றம் செய்துள்ளார். பின், அந்த நிலத்தை நாமக்கல் தூசூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு மாற்றம் செய்து கொடுத்துள்ளார். அவர் அய்யாவு என்பவரின் பெயருக்கு பட்டாவை பெயர் மாற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில், நடராஜன் தனது நிலத்தை வங்கியில் அடகு வைக்க முயற்சித்தபோது,நிலம் பாலசுப்பிரமணியம் மற்றும் அய்யாவு ஆகியோர் பெயரில் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் நாமக்கல் மாவட்ட பதிவாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் பாலசுப்ரமணியம்,அய்யாவு ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் பெயர் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரும் இரண்டு மாத காலத்திற்குள் தங்களது பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என, மாவட்ட பதிவாளர் மூலம் உத்திரவிடப்பட்டது. எனினும்,பத்திரப் பதிவு ரத்து செய்யப்படாததால் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இருவர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.